பெற்றோல் விலை குறைக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணம் குறைக்கப்படாது என பஸ் சங்கங்களும், முச்சக்கரவண்டிக் கட்டணத்தில் எவ்வித குறைப்பும் செய்யப்படமாட்டாது என்று முச்சக்கரவண்டி தொழிற்சங்கங்களும் தெரிவித்துள்ளன.
அண்மையில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர், மாவட்ட தலைவர் மற்றும் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்தியன் எரிபொருள் நிறுவனம் (ஐஓசி) இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தங்களுடைய தந்தையை கவனித்துக்கொள்ள வேண்டுமாயின் மாதமொன்றுக்கு 2 இலட்சம் ரூபாயை, தருமாறு அவருடைய ஏழு மகள்களும் கோரியுள்ள சம்பவம் பாதுக்க பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு தாமரை கோபுரம் கடந்த 15 ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம், முதல் 3 நாட்களில் 75 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக கொழும்பு றிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எப்போது நாடு திரும்புவார் என்பது குறித்து இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.