மீண்டும் பால் மா விலை அதிகரிப்பு?
பால் மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று தமது பால்மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று தமது பால்மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பால் மா பொதி ஒன்றின் விலையை 100 ரூபாயினால் அதிகரிக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்புடன் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 1240 ரூபாயாக அதிகரிக்கவுள்ளது.
இதேவேளை, பால் மா விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என உள்நாட்டு நிறுவனங்கள் தொிவித்துள்ளன.