நாடளாவிய ரீதியில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் ஆகியன இணைந்து இன்று (08) எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன.

நாடளாவிய ரீதியில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்
ADVERTISEMENT
ADVERTISEMENT

தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் ஆகியன இணைந்து இன்று (08) எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன.

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் அரச மற்றும் தனியார் துறையின் பல பிரிவுகளை சேர்ந்தவர்களும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மக்களை பாதித்துள்ள வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலுள்ள நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதாக தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்தார்.

மேலும் சில நிறுவனங்களின் ஊழியர்கள் தமது உணவு நேரத்தில், தமது பணியிடங்களுக்கு முன்பாக அல்லது தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் தமது எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT