வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: 6.6 மில்லியன் ரூபாய் மோசடி செய்த 21 வயது இளைஞன் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவதாக உறுதியளித்து, இணையவழி வங்கிச் சேவைகளின் மூலம் பணத்தைப் பரிமாறச் செய்து சந்தேகநபர் இப்பெண்ணை ஏமாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: 6.6 மில்லியன் ரூபாய் மோசடி செய்த 21 வயது இளைஞன் கைது
AI generated image
ADVERTISEMENT
ADVERTISEMENT

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, பெண்ணொருவரிடம் சுமார் 6.6 மில்லியன் ரூபாயை (ரூ. 6,644,000) மோசடி செய்த குற்றச்சாட்டில் 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தக் கைது நடவடிக்கை, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பாதிக்கப்பட்டவர் பங்கதெனிய, குறுக்குப்பனை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஆவார். 

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவதாக உறுதியளித்து, இணையவழி வங்கிச் சேவைகளின் மூலம் பணத்தைப் பரிமாறச் செய்து சந்தேகநபர் இப்பெண்ணை ஏமாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான முறைப்பாடு 2025 ஜூன் மாதம் 27ஆம் திகதியன்று பொலிஸாருக்குக் கிடைத்தது. இது குறித்து நடத்தப்பட்ட தொடர் விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் அம்பிலாந்துறை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் திங்கட்கிழமை (03) மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT