ஈஸ்டர் தாக்குதல் வழக்கு தீர்ப்பு: குற்றவாளிகள் 15 பேருக்கு 200 ஆண்டுகளுக்கு மேல் கடூழிய சிறை; சொத்துகளையும் பறிமுதல் செய்ய உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளான 15 பேருக்கு 200 முதல் 260 ஆண்டுகள் வரை கடூழிய சிறைத்தண்டனை மற்றும் சொத்துக்களை அரசுடைமையாக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு தீர்ப்பு: குற்றவாளிகள் 15 பேருக்கு 200 ஆண்டுகளுக்கு மேல் கடூழிய சிறை; சொத்துகளையும் பறிமுதல் செய்ய உத்தரவு
image source - bbc
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 15 பிரதிவாதிகளுக்கும் 200 முதல் 260 ஆண்டுகள் வரையிலான கடூழிய சிறைத்தண்டனை விதித்து, கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம், நேற்றிரவு (22) தீர்ப்பளித்துள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியமை, அதற்கு உடந்தையாகச் செயற்பட்டமை மற்றும் தீவிரவாதப் பிரசார உரைகளை நிகழ்த்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே இந்த தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்படி, குற்றவாளிகளில் 05 பேருக்கு தலா 200 ஆண்டுகளும், மேலும் 05 பேருக்கு தலா 220 ஆண்டுகளும், 04 பேருக்கு தலா 240 ஆண்டுகளும், ஒருவருக்கு அதிகபட்சமாக 260 ஆண்டுகளும் கடூழிய சிறைத்தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், தண்டனை விதிக்கப்பட்ட 15 குற்றவாளிகளினதும் தண்டனைக் காலம் ஆரம்பமாகும் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், அவர்களுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் அனைத்தையும் உடனடியாக அரசுடைமையாக்கி பறிமுதல் செய்யுமாறும் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்குத் தலா 220 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேவேளை, போதிய சாட்சியங்கள் இன்மையால் 9 பேர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
 
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 பேர்:

ADVERTISEMENT
ADVERTISEMENT

மொஹம்மது நௌஃபர் மௌலவி

மொஹமட் சரீப் ஆதம் லெப்பை (கபூர் மாமா)

ஹயாத்து மொஹம்மது அஹமது மில்ஹான்

மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா

மொஹமட் இப்ராஹிம் சாஹிட் அப்துல் ஹக்

மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான்

மொஹமட் மன்சூர் மொஹமட் சனஸ்தீன்

அப்துல் மனாஃப் மொஹமட் பிர்தௌஸ்

மொஹமட் ரமீஸ் மொஹமட் சாஜித்

அப்துல் லத்தீப் மொஹமட் சாஃபி

ஹுஸைனுல் ரிஸ்வி காலித் சமீர்

மொஹமட் ஹனீபா செய்னுல் ஆப்தீன்

மொஹமட் முஸ்தபா மொஹமட் ஹாரிஸ்

ராசிக் ரசா ஹுசைன்

கச்சி மொஹம்மது மொஹம்மது ஜெம்சித்
 
குற்றச்சாட்டுகளிலிருந்து 9 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

வழக்கின் 17ஆவது சந்தேகநபரான யாசிம் பாவா அப்துல் ரவூப் விசாரணைகள் நடந்த காலப்பகுதியில் உயிரிழந்திருந்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT