பெண்களுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹனதீரவினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (09) ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார்.
கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் வெளிச்சம் போட்டுக் காட்டுவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.
இந்த வருடத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஒரு தேர்தலையாவது நடத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் 607 பொலிஸ் நிலையங்கள் உள்ளதாகவும் அவற்றில் 121 பொலிஸ் நிலையங்கள் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட தனியார் கட்டிடங்களில் இயங்குவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
எழுத்தாளர் சங்கரி 60,000 அவுஸ்திரேலிய டொலர் மதிப்புள்ள மைலஸ் பிராங்க்ளின் இலக்கிய விருதுக்காக தெரிவாகியுள்ளதாக, சிட்னியில் உள்ள தி ஓவோலோ விருந்தகத்தில் வைத்து அறிவிக்கப்பட்டது.
ஒருவேளை நான் மீண்டும் அமைச்சராகி இதைச் செய்ய வேண்டும் என அதிகாரிகள் நினைத்தார்களோ தெரியவில்லை. அல்லது நான் மீண்டும் அமைச்சர் ஆக மாட்டேன் எனவும் அதிகாரிகள் நினைத்தார்களோ தெரியவில்லை.