ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று(02) நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இடம்பெறுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கட்சியின் மாநாடு தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற் கொள்வதற்காக கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று(02) நடைபெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆவது வருடாந்த மாநாட்டை செப்டம்பர் 10ஆம் திகதி நடத்துவது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.