சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இலங்கை வருகின்றார் சச்சின்

கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் வெளிச்சம் போட்டுக் காட்டுவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.

சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இலங்கை வருகின்றார் சச்சின்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் யுனிசெபின் தெற்காசியாவிற்கான பிராந்திய தூதுவருமான சச்சின் டெண்டுல்கர், நாளை செவ்வாய்க்கிழமை (08) இலங்கை வரவுள்ளார்.

கொழும்பு - சினமன் லேக்சைட்டில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் அவர் இதன்போர் கலந்துகொள்ளவுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் வெளிச்சம் போட்டுக் காட்டுவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.

சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் தீவிரமாக செயற்படும் யுனிசெஃப் திட்டங்களில், பிராந்தியத் தூதுவர் எனும் வகையில் சச்சின் முன்னின்று செயற்பட, இந்த இலங்கை விஜயமானது அவருக்கு உதவி புரிகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT