தேசியசெய்தி

விசேட அதிரடிப்படையினருக்கு 100 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 50 முச்சக்கர வண்டிகளை வாங்க தீர்மானம்

விசேட அதிரடிப்படையினருக்கு (STF) 125cc எஞ்சின் திறன் கொண்ட 100 மோட்டார் சைக்கிள்களையும் 50 முச்சக்கர வண்டிகளையும் வாங்க முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

காலி முகத்திடலில் பயணியை தாக்கிய பஸ் நடத்துனருக்கு விளக்கமறியல்

காலி முகத்திடல் பகுதியில் நபர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக 35 வயது பஸ் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார், இந்த சம்பவம் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது.

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு: 4 பொலிஸ் குழுக்கள் விசாரணை

அம்பலாங்கொடையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள், விசாரணைகளை முன்னெடுத்துள்ளன. 

சரித ரத்வத்தவுக்கு பிணை வழங்கப்பட்டது

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சின் செயலாளரும் முன்னாள் பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் இரண்டு முன்னாள் அரச அதிகாரிகள் கைது 

இலங்கை ரயில்வேயின் முன்னாள் பொது மேலாளர் மற்றும் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இனி இது கட்டாயம்: பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் அறவீடு; இன்று முதல்  நடைமுறை

நாட்டில் வர்த்தக நிலையங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு இன்று முதல் கட்டாயம் பணம் அறவிடப்படவுள்ளது. இந்த புதிய திட்டம் நாட்டில் இன்று நடைமுறைக்கு வருகிறது.

எரிபொருள் விலை குறைப்பு: சாரதிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் 

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00 மணி முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 

ஜனவரி 28 ஆம் திகதிக்குள் ரணிலின் விசாரணைகளை முடிக்குமாறு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொது சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையை ஜனவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

‘அஸ்வெசும’ இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கு அதிரடி அறிவிப்பு

இரண்டாம் கட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, இதுவரை வங்கிக் கணக்கு திறக்காத பயனாளிகள், உடனடியாக தமது பிரதேச செயலகத்திற்குச் சென்று வங்கிக் கணக்குகளைத் திறப்பது தொடர்பான கடிதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஆச்சிக்கு எதிரான வழக்குக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​பிணையில் விடுவிக்கப்பட்ட பிரதிவாதிகளான யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானனர்.

ஆட்பதிவுத் திணைக்களத்தில் குவிந்துள்ள 1.5 மில்லியன் அடையாள அட்டை விண்ணப்பங்கள்!

பல ஆண்டுகளாக அச்சிடப்படாத தேசிய அடையாள அட்டைகளுக்கான சுமார் 1.5 மில்லியன் விண்ணப்பங்கள் ஆட்பதிவு திணைக்களத்தில் குவிந்துள்ளதாகத் திணைக்களத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

நாட்டில் தற்போது பெய்து வரும் அதிக மழையின் காரணமாக நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

‘ராஜரட்ட ரெஜினி’ ரயிலில் தீ விபத்து; வெளியான தகவல்

அநுராதபுரத்திலிருந்து பெலியத்த வரை இயக்கப்படும் ‘ராஜரட்ட ரெஜினி’ ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

பட்ஜெட்டுக்கு முன் சிறப்புப் பாதுகாப்புச் சோதனை;  நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறைகள் சோதனையிடப்படும்

பட்ஜெட் நாட்களில் பொதுமக்கள் காட்சிக்கூடத்திற்குள் நுழைய அழைக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான வெலிகம பிரதேச சபைத் தலைவர் உயிரிழப்பு

பிரதேச சபை அதிகாரிகள் கூட்டாக தலைவரை மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

இறக்குமதி அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை: வர்த்தமானி வெளியீடு

புதிய விலை நிர்ணயம், அதன் தலைவரின் கையொப்பத்துடன் வர்த்தமானியாக வெளியிடப்பட்டுள்ளது.