சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை
நாட்டில் உள்ள சகல அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள சகல அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடி நிலைக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் கல்வி அதிகாரிகளுக்கு இடையில் நேற்று(03) இணையவழியில் இடம்பெற்றிருந்தது.
இந்த கலந்துரையாடலின் போது, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வாரம் பாடசாலைகளுக்கு விடுமுறை வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த விடுமுறையை எதிர்வரும் தவணை விடுமுறை காலத்தில் ஈடு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.