தேர்தலில் அன்னம் சின்னத்தில் களமிறங்கும் ஜனாதிபதி ரணில்?
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குழுவை இணைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அன்னம் சின்னத்தில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குழுவை இணைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவும் அன்னம் சின்னத்திலேயே களமிறங்கியிருந்தார்.