வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகள் நீக்கம்

வாகன இறக்குமதி மீதான மேலும் சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் புதிய வர்த்தமானி அறிவிப்பை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.

மே 2, 2025 - 12:26
வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகள் நீக்கம்

வாகன இறக்குமதி மீதான மேலும் சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் புதிய வர்த்தமானி அறிவிப்பை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இதனூடாக, இறக்குமதி செய்யப்பட்டும் பல்வேறு காரணங்களால் விடுவிக்க முடியாமல் துறைமுகத்தில் காணப்படும் பல வகையான கார்களை விடுவிக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம், “Hybrid Toyota Raize மற்றும் Hybrid Nissan X-TRAIL ஆகிய வாகனங்களை புதிய வர்த்தமானியின் பிரகாரம் இப்போது இறக்குமதி செய்ய முடியும்” என்று கூறியுள்ளது.

அத்துடன், இந்த தொழில்நுட்பத்தின் கீழ் வரும் ஏனைய வாகனங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், பதிவு செய்யப்படாத புதிய மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இறக்குமதி அனுமதிகளைப் பெற்று புதிய மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!