நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
இன்று இலங்கையின் வடக்கு, வடமத்திய, திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது. வளிமண்டல திணைக்களம் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 5வது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு நாளை (புதன்கிழமை 08) நடைபெறவுள்ளது. "வெவ்வேறு துறைகளை இணைத்து மாற்றங்களை வலுவூட்டுவதற்காக அறிவைச் செயற்படுத்துதல்" என்ற தொனிப்பொருளில் 16 ஆய்வுத் தடங்களில் மாணவர்கள் தமது ஆய்வுகளை அளிக்கவுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பிரபல விடுதி பெயர்களைப் பயன்படுத்தி, பெண்களுடன் உல்லாசம் என சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபடும் கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்டோர் அவதானம்!
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவம். நீதிமன்ற உத்தரவின் கீழ் வைக்கப்பட்டிருந்த புறாக்கள் காணாமல் போனதால், பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
நாகொடவில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் 23 வயது இளைஞன் கைது. ஒற்றை தோட்டாவை சுடக்கூடிய தானியங்கி துப்பாக்கி பறிமுதல்.
சட்டப் படிப்பில் கவனம் செலுத்தி வரும் மாணவியான சம்ரிதிக்கு, சமையலிலும், குறிப்பாக பேக்கிங்கிலும் அதிக ஆர்வம் இருந்துள்ளது. இந்த ஆர்வத்தை வெறும் பொழுதுபோக்காக விட்டுவிடாமல், அவர் கடந்த 2024 ஆம் ஆண்டில் 'லா ஜோய்' (La Joie) என்ற பெயரில் தனது வீட்டிலேயே ஒரு பேக்கரியைத் தொடங்கினார்.
ஹைதராபாத்தில் தனது குடும்ப உறுப்பினரின் அவசர மருத்துவ தேவையை கருத்தில் கொண்டு வார இறுதி நாளில் கூடுதலாக வேலை பார்க்க மறுத்த ஊழியரை, அந்நிறுவனம் பணி நீக்கம் செய்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கம்பளை, தொலுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் வீதியில் பயணித்த 3 பெண்கள் உயிரிழந்திருந்தனர். காரை செலுத்திச் சென்ற பெண்ணின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் குணமடைந்தவுடன், அவரது பெற்றோர் கொழும்பு நீச்சல் கழகத்திற்கு எதிராக வழக்குத் தொடர்வார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக வேண்டும் என்பதே எனது கனவு என்று இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், இருமல் மருந்தைக் குடித்த 11 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அண்டை மாநிலமான ராஜஸ்தானின் சிகாரிலும், இரண்டு குழந்தைகள் சிறுநீரகங்கள் செயலிழந்து உயிரிழந்தன.
மேற்குவங்காள மாநிலத்தில் டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிப் பூர்துவார் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.