பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக பெண் செய்த காரியம்... வீதியில் சென்ற 3 பெண்கள் உயிரிழப்பு
கம்பளை, தொலுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் வீதியில் பயணித்த 3 பெண்கள் உயிரிழந்திருந்தனர். காரை செலுத்திச் சென்ற பெண்ணின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கம்பளை, தொலுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் வீதியில் பயணித்த 3 பெண்கள் உயிரிழந்திருந்தனர். காரை செலுத்திச் சென்ற பெண்ணின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வீதியின் ஓரத்தில் பயணித்த பெண்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதோடு, அங்கு பயணித்த லொறி ஒன்றின் மீதும் மோதியுள்ளதுடன், இதனை அடுத்து லொறியும் அந்த பெண்கள் மீது மோதியுள்ளதாக கூறப்படுகின்றது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் 70 மற்றும் 67 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. விபத்துக்கு காரணமான காரை 36 வயதுடைய பெண் ஒருவர் செலுத்தியுள்ளார். அவர் சாரதி பயிற்சி அனுமதிப் பத்திரத்தை கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் தமது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கம்பளை நகருக்கு வந்த நிலையில் அவரது கணவர் காரை செலுத்தியிருந்ததாக கூறப்படுகின்றது. பின்னர் கணவர் தமது மனைவிக்கு காரை செலுத்துவதற்கு வாய்ப்பளித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த விகாரைக்கு அருகில் பயணித்த போது அந்த பெண் பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக முடுக்கி (Accelerator) ஐ அழுத்தியுள்ளார் இதனால் கார் வேகமாக சென்று வீதியில் பயணித்த நான்கு பெண்கள் மீதும் லொறியிலும் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் காரை செலுத்திய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் விசாரணைக்க உட்படுத்தப்பட்டுள்ளார்.