161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வர்த்தமானி வெளியீடு
161 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களின் பெயர்கள் கொண்ட வர்த்தமானி வெளியாகி உள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனிக் கட்சி பெரும்பான்மையைப் பெற்ற 161 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களின் பெயர்கள் கொண்ட வர்த்தமானி வெளியாகி உள்ளது.
மேலும், அறுதி பெரும்பான்மை பெறாத 178 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தலைவர்களைத் தெரிவு செய்வதற்கான அதிகாரம், உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.