கெஹெலிய மற்றும் அவரது மகன் பிணையில் விடுவிப்பு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(03) அனுமதித்து உள்ளது.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(03) அனுமதித்து உள்ளது.
கெஹெலிய அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், அரசாங்கத்திற்கு 8 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகள் மூன்றுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரின் மகன் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் அமைச்சரின் முன்னாள் ஒருங்கிணைப்பு அதிகாரியான நிஷாந்த பண்டார ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, சந்தேக நபர்கள் மூவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
அதன்படி, ஒவ்வொரு சந்தேக நபர்களும் தலா 50,000 ரூபாய் காசுப் பிணையிலும் மற்றும் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டனர்.
சந்தேக நபர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டதுடன், பிணையாளர்கள் அவர்களின் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.