கடந்த 24 மணி நேரத்தில் 233 தேர்தல் முறைப்பாடுகள்
ஜனாதிபதி தேர்தல் அண்மித்து வரும் நிலையில், தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன.

ஜனாதிபதி தேர்தல் அண்மித்து வரும் நிலையில், தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன.
நேற்று (05) மாலை 4.30 மணி வரையான முந்தைய 24 மணித்தியாலங்களில் 233 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், இது தொடர்பான அறிக்கை ஒன்றை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
மேலும், ஜூலை 31 முதல் செப்டம்பர் 5 வரை பெறப்பட்ட தேர்தல் புகார்களின் எண்ணிக்கை 2460 ஆக அதிகரித்துள்ளது.