நானுஓயா ஆலயம் உடைக்கப்பட்டு கொள்ளை
இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

நானுஓயா டெஸ்போட் கீழ்ப் பிரிவில் ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு தங்க நகைகள், உண்டியல் பணம் ஆகியவை கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினால் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கு முன்னரும் குறித்த ஆலயத்தில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்று தங்க நகைகள், உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கை பணம் திருட்டு போயிருந்தமை தொடர்பில் நானுஓயா பொலிஸ் நிலையத்தில், முறைப்பாடு செய்யப்பட்டிருந்தாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.