நுவரெலியாவில் மூடுபனி; சாரதிகளுக்கு அறிவுறுத்தல்
நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் நுவரெலியாவில் இருந்து பம்பரகலை வரையிலும் இந்த அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது.

நுவரெலியாவுக்கு செல்லும் பல முக்கிய வீதிகளில் காணப்படும் அடர்ந்த மூடுபனியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா முதல் நுவரெலியா வரையிலும், நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா முதல் ஹக்கல வரையிலும் அடர்ந்த மூடுபனி காணப்படுகின்றது.
அத்துடன், நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் நுவரெலியாவில் இருந்து பம்பரகலை வரையிலும் இந்த அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது.
குறித்த வீதிகளில் வாகனங்களை கவனமாக செலுத்துமாறு, சாரதிகளை நுவரெலியா பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.