வீதியை விட்டு விலகி வான் விபத்து; குழந்தைகள் உட்பட 18 பேர் காயம்
பாடசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 18 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகி, கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா - கம்பளை பிரதான வீதி, இறம்பொடை எல்ல - ஆர்.பி வட்ட பகுதியில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் கவிழ்ந்து இன்று (14) விபத்துக்குள்ளானது.
பாடசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 18 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகி, கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய இந்த விபத்து, சமீபத்தில் கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் 23 பேரைக் கொன்ற பஸ் விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.