துப்பாக்கி சூட்டில் உணவக உரிமையாளர் பலி
ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவர் நேற்று (18) இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவர் நேற்று (18) இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு கொல்லப்பட்டவர் உணவகம் ஒன்றின் உரிமையாளர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றிரவு சுமார் 10.10 மணியளவில் உணவகம் மூடப்பட இருந்த வேளையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
46 வயதுடைய குறித்த நபர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.