கொழும்பு துறைமுக நகரத்திற்கான புதிய வீசா 

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

டிசம்பர் 20, 2022 - 18:45
கொழும்பு துறைமுக நகரத்திற்கான புதிய வீசா 

கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவுவதற்குள்ள சர்வதேச வணிகம், கப்பற்றுறை நடவடிக்கைகள், நிதி, தகவல் தொழிநுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு சேவைகளுக்காக வருகை தரவுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய குறித்த தரப்பினர்களுக்கு வீசா வழங்கல் மற்றும் அதற்குரிய பணிகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

அதற்கமைய, கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கீழ்க்காணும் வீசா வகைகளை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

* வதிவிட வீசா வகையின் கீழ் முதலீட்டாளர்களுக்கான ´முதலீட்டாளர் வீசா´ வகை
* சேவை வழங்குநர்களுக்கான ´சேவை வழங்குநர் வீசா´ வகை
* கொழும்பு துறைமுக நகரத்தில் குத்தகை அடிப்படையில் வசிக்கின்ற வெளிநாட்டவர்களுக்கான ´சீபிசீ வதிவிட சொத்து குத்தகையாளர்´ வீசா வகை

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!