'ஆறு மாதங்களுக்குள் 60,000 பேருக்கு தீர்வு'
தேர்தல் காலம் நெருங்கும் போது அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாக தற்போதைய அரசாங்கம் உறுதியளித்த போதிலும், அவர்களுக்கு உரிய நீதி இதுவரை கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்ட சுமார் 60,000 பேருக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து முதல் ஆறு மாதங்களுக்குள் நடைமுறை தீர்வுகளை வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.
தேர்தல் காலம் நெருங்கும் போது அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாக தற்போதைய அரசாங்கம் உறுதியளித்த போதிலும், அவர்களுக்கு உரிய நீதி இதுவரை கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.