இன்ஸ்டா போல மாறும் வாட்ஸ் அப்: மெட்டா அதிரடி!
தகவல் தொடர்பு செயலியில் முன்னோடியாக வாட்ஸ்-அப் செயலி உள்ளது. குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு செயலியில் முன்னோடியாக வாட்ஸ்-அப் செயலி உள்ளது. குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த செயலி மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தற்போது புதிய வசதியை கொண்டு வர உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரே போனில் இரண்டு வாட்ஸ்-அப் கணக்குகளை பயன்படுத்துவது போன்று புதிய அம்சம் அறிமுகமாக உள்ளது.
இது தொடர்பான மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்திருக்கிறார். தற்போதைய சூழலில் வாட்ஸ்-அப் செயலியில் பயனாளரால் ஒரே கணக்கை மட்டுமே பயன்படுத்த முடியும்.
முன்னதாக, வெவ்வேறு தொலைபேசி எண்களைக் கொண்ட இரண்டு WhatsApp கணக்குகளைப் பயன்படுத்த, பயனர்கள் கட்டாயம் இரண்டு சாதனங்களைப் பயன்படுத்த வேண்டி உள்ளது.
இரண்டு தொலைபேசிகளை பயன்படுத்துவது ஒரு தொந்தரவாக இருக்கும். குறிப்பாக இரட்டை சிம் விருப்பங்கள் உள்ளவர்களுக்கு, குளோன் செய்யப்பட்ட WhatsApp செயலிகளை பயன்படுத்துவது பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும்.
அதற்கு தீர்வு காணும் வகையில் தான் இந்த புதிய அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
QR குறியீடு பொத்தானுக்கு அருகில் உள்ள அம்புக்குறி ஐகானைத் தொடுவதன் மூலம் பயனர்கள் புதிய WhatsApp கணக்கைச் சேர்க்கும் திறனைப் பெறுவார்கள்.
அதே நேரத்தில் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் செயலிகளை மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று மெட்டா அறிவுறுத்தியுள்ளது.