வாக்குப்பதிவு நிறைவு: முதல் முடிவு எப்போது? வெளியான அறிவிப்பு
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்தது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்தது.
நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் கிட்டத்தட்ட 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தியுள்ளனர்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவலின்படி, இன்று நள்ளிரவுக்குள் தபால் வாக்குகளின் முதல் முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விருப்பு வாக்குகள் எண்ணப்படும் நிலை ஏற்பட்டாலும் நாளை (22) தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் பணியை முடித்துவிடுவோம் என்று தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
“தபால் வாக்கு எண்ணிக்கை மாலை 4.30 முதல் 5.00 மணிக்குள் தொடங்கும், இன்று நள்ளிரவுக்கு முன் முதல் தபால் முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று தேர்தல் ஆணைக்கு அதிகாரிகள் தெரிவித்தனர். (நியூஸ்21)