நுவரெலியா விபத்து - ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு 

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 6 பேர் வேனில் பயணித்தவர்கள் எனவும் மற்றையவர் முச்சக்கர வண்டி சாரதி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Jan 21, 2023 - 07:50
நுவரெலியா விபத்து - ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு 

நுவரெலியா – நானுஓயா விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கவலைக்கிடமாக உள்ளவர்களை விமானப்படையினர் விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்து வருமாறும் ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

நுவரெலியா – ரதெல்ல பகுதியில்  இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர்கள் அடங்கவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 6 பேர் வேனில் பயணித்தவர்கள் எனவும் மற்றையவர் முச்சக்கர வண்டி சாரதி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்