ராஜகுமாரி விவகாரம்; கைதான 3 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் விளக்கமறியல்
வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்த ராஜன் ராஜகுமாரி என்ற பணிப்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, அவர்கள் புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, சந்தேக நபர்களான மூன்று பொலிஸாரையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான வெலிக்கடை உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்ற உத்தரவின் கீழ் செப்டெம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆர்.ராஜகுமாரி எனப்படும் குறித்த பெண், கடந்த மே மாதம் 11ஆம் திகதி வெலிக்கடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
பணிபுரிந்த வீட்டில் தங்கநகையைத் திருடியதாக குறித்த பெண் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
கைதுசெய்யப்பட்ட தினத்தன்று இரவு ராஜகுமாரி வெலிக்கடை பொலிஸாரினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
எனினும், அவர் கடுமையாக தாக்கப்பட்டதால் தான் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.