சாதாரணதரப் பரீட்சை - 10,863 பேர் 9 ஏ சித்தி

நவம்பர் 27, 2022 - 11:51
நவம்பர் 27, 2022 - 11:52
சாதாரணதரப் பரீட்சை - 10,863 பேர் 9 ஏ சித்தி

பரீட்சை பெறுபேறுகள்

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியானது.

இதற்கமைய, தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 10,863 பேர் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

மேலும், 498 பரீட்சார்த்திகளின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இதற்கமைய, க.பொ.த சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றிய 231,982 பரீட்சார்த்திகள் உயர்தரத்தி

இதேவேளை, சாதாரண தர பரீட்சை பெறுபேறு சான்றிதழ்களை எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், ஒன்லைன் முறையில் அதற்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் L.M.D.தர்மசேன தெரிவித்துள்ளார்.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!