பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த மே மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் மதிப்பீட்டு பணியை அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த மே மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.
குறித்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றியிருந்ததுடன், 3 இலட்சத்து 94 ஆயிரத்து 450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.