டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவான சந்தேகநபர் பொகவந்தலாவையில் அதிரடி கைது – நகைகள் பறிமுதல்

டிக்கோயா வர்த்தக நிலைய இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவான சந்தேகநபர் பொகவந்தலாவையில் அதிரடி கைது – நகைகள் பறிமுதல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற பரபரப்பான இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த பிரதான சந்தேக நபர், பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பின்போது, வீடொன்றில் பதுங்கியிருந்த சந்தேகநபர் கைப்பற்றப்பட்டதுடன், அவரிடமிருந்து தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர இக்கைதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளுக்காகச் சந்தேகநபர் ஹட்டன் மத்திய பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்படுவதாகப் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT