காணாமல் போன 19 வயது யுவதியை தேடுவதற்கு பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

ஹாலி எல பகுதியைச் சேர்ந்த 19 வயது யுவதி ஒருவர் காணாமல் போனதாக அட்டம்பிட்டிய காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போன 19 வயது யுவதியை தேடுவதற்கு பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஹாலி எல பகுதியைச் சேர்ந்த 19 வயது யுவதி ஒருவர் காணாமல் போனதாக அட்டம்பிட்டிய காவல் நிலையத்திற்கு முறைப்பாடு வந்துள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிப்பதற்குப் பொதுமக்கள் உதவுமாறும் காவல்துறை தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

ஹாலி எல பகுதியைச் சேர்ந்த தாய், தனது மகள் காணாமல் போனதாக மார்ச் 6ஆம் திகதி அட்டம்பிட்டிய காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்ததாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெலிமடை நீதவான் நீதிமன்றத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

காணாமல் போன யுவதியின் பெயர் ரத்நாயக்க முதியன்செலகே கவிந்தியா பவானி (Ratnayake Mudiyanselage Kavindya Bhavani) என்றும், அவரது வயது 19 என்றும், தேசிய அடையாள அட்டை எண் 200750204474 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவரது முகவரி ஹெல மொரதொட்ட, ஹாலி எல என்பதாகும். காணாமல் போன யுவதி, சுமார் 5 அடி 06 அங்குல உயரமும், மெலிவான உடலமைப்பும் கொண்டவர் என்றும், அவரது கூந்தல் இடுப்பு வரை வளர்ந்திருப்பதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தப் புகைப்படத்தில் உள்ள பெண்ணைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக அட்டம்பிட்டிய காவல்துறை பொறுப்பதிகாரியை - 071 - 8591528 அல்லது அட்டம்பிட்டிய காவல்நிலையத்தை 055 - 2294965 தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT