மாத்தளை மனிதப் புதைகுழி: விசாரணை கோரி தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிமன்றில் முறைப்பாடு

மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கோரி, தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இன்றைய தினம் (23) மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

மாத்தளை மனிதப் புதைகுழி: விசாரணை கோரி தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிமன்றில் முறைப்பாடு
ADVERTISEMENT
ADVERTISEMENT

மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கோரி, தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களினால் இன்றைய தினம் (23) மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது. 

நீண்ட காலமாக புதைக்கப்பட்டு கிடக்கும் இந்த மனிதப் புதைகுழி தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வதற்கான நடவடிக்கைகள் இதன்மூலம் துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தங்களின் அன்புக்குரியவர்களின் மரணம் குறித்த உண்மையை அறிவதற்கும், நீதி பெறுவதற்குமான இந்த முயற்சியில், நீதிமன்றத்தின் தலையீட்டை எதிர்பார்த்துள்ளனர். 

கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் அரசியல் அடக்குமுறைகளின் போது காணாமலாக்கப்பட்ட பலரின் உடல்கள் இந்தப் புதைகுழியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த விடயத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT