கொழும்பில் 'uncover' புகைப்படக் கண்காட்சி: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விஜயம்
கொழும்பு-07 இல் அமைந்துள்ள JDA Perera Gallery இல் ACT NOW அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “uncover“ புகைப்படக் கண்காட்சியை, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்டகட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று (17) நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, மலையகத் தமிழ் சமூகத்தின் நிலம், இருப்பிடம் மற்றும் ஏனைய மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட பிரதியமைச்சர், மலையக மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.







எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.