சாரதி இல்லாமல் நகர்ந்த பஸ்: பஸ்ஸுக்கும் லொறிக்கும் இடையில் சிக்கி இளைஞன் பலி!

இதனால் லொறிக்கும் பஸ்ஸுக்கும் இடையில் சிக்கிய இளைஞன் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சாரதி இல்லாமல் நகர்ந்த பஸ்: பஸ்ஸுக்கும் லொறிக்கும் இடையில் சிக்கி இளைஞன் பலி!
ADVERTISEMENT
ADVERTISEMENT

பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (20) காலை இடம்பெற்ற விபத்தில் 28 வயது இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குழாய் கிணறு பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பயணித்த லொறி, பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இளைஞன், அந்த லொறிக்கு அருகில் நின்றுகொண்டிருந்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதேவேளை, லொறிக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ்ஸொன்று, சாரதி இல்லாத நிலையில் தானாகவே முன்னோக்கி நகர்ந்து வந்து, லொறிக்கு அருகில் நின்று கொண்டிருந்த இளைஞன் மீது மோதியுள்ளது.

இதனால் லொறிக்கும் பஸ்ஸுக்கும் இடையில் சிக்கிய இளைஞன் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT