ஹட்டன் மண்சரிவு சோகம்: வீட்டின் மீது மண்மேடு சரிந்ததில் காணாமல் போன 4 பேரும் சடலமாக மீட்பு

சம்பவத்தையடுத்து அனர்த்தத்தில் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் பொலிஸார், அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் மற்றும் மீட்புக் குழுவினர் இணைந்து தீவிரமாக ஈடுபட்டனர்.

ஹட்டன் மண்சரிவு சோகம்: வீட்டின் மீது மண்மேடு சரிந்ததில் காணாமல் போன 4 பேரும் சடலமாக மீட்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஹட்டன், கினிகத்தேனை – பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவே இந்த துயரச் சம்பவத்துக்குக் காரணமாக அமைந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சம்பவத்தையடுத்து அனர்த்தத்தில் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் பொலிஸார், அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் மற்றும் மீட்புக் குழுவினர் இணைந்து தீவிரமாக ஈடுபட்டனர்.

தேடுதல் நடவடிக்கைகளின் ஆரம்ப கட்டத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மீட்புப் பணிகளில் மேலும் இரண்டு பெண்களினதும் ஓர் ஆணினதும் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்மூலம் மண்சரிவில் காணாமல் போயிருந்த நால்வரும் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT