“மத்திய கிழக்கில் அமைதி திரும்ப ரஷ்யா உதவும்” - புதின் உறுதி

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்க ரஷ்யா உதவும் என அதிபர் புதின் உறுதியளித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஈரான் வெளியுறவுத் துறை மந்திரியைச் சந்தித்துப் பேசிய புதின், அமைதிக்கான முழு ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்தார்.

“மத்திய கிழக்கில் அமைதி திரும்ப ரஷ்யா உதவும்” - புதின் உறுதி
ADVERTISEMENT
ADVERTISEMENT

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணித்து, அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யும் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் உறுதியளித்துள்ளார்.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ரஷ்ய அதிபர் புதினை ஈரானின் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி சந்தித்தார். அப்போது புதின் பேசியதாவது:

ADVERTISEMENT
ADVERTISEMENT

“மத்திய கிழக்கில் கூடிய விரைவில் அமைதி திரும்புவதை உறுதி செய்ய, ரஷ்யா தனது அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்தையும் செய்யத் தயாராக உள்ளது. ஈரானின் புதிய தலைமை மற்றும் மக்களின் தைரியத்தின் மூலம் இந்த இக்கட்டான காலத்தை அந்த நாடு கடக்கும் என்று நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.

கடந்த ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்தச் சூழலில், ரஷ்யாவின் தலையீடு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் எழுந்துள்ளது. ரஷ்யா முன்பு சிரியா, உக்ரைன் போன்ற மோதல்களில் நடுவராகச் செயல்பட்டுள்ளதால், இந்த முயற்சியும் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

புதினின் இந்த அறிவிப்பை அடுத்து, ஈரான்-அமெரிக்க உறவுகளில் சாதகமான மாற்றம் ஏற்படுமா, அல்லது பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குமா என்பதை உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ளன. எனினும், இதுகுறித்து அமெரிக்கா அல்லது ஈரான் தரப்பில் உடனடி அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வெளியிடப்படவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT