நேரம் சரியில்லை; வாஷிங்டனைவிட்டு நகர முடியாது - தனது மகனின் திருமணத்திற்கு செல்லாத டிரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப், தமது மூத்த மகன் Donald John Trump Jr இன் திருமணத்திற்குச் செல்லவில்லை என்று அறிவித்திருக்கிறார்.
இந்தத் திருமணம், கரீபிய பஹமாஸ் தீவில் அடுத்தவாரம் நடைபெறவுள்ளது.
“மகன் கல்யாணத்துக்குப் போகவே விருப்பம் என்றாலும் அதைவிடத் தேசப்பணி முக்கியம்” என டிரம்ப் தெரிவித்தார்.
ஈரான் போர் போன்றவற்றால் தற்போது நேரம் சரியில்லை என்றும் இது முக்கியமான காலகட்டம்; தற்போது தலைநகர் வாஷிங்டனைவிட்டு நகர முடியாது என்றும் டிரம்ப் கூறினார்.
“மகனின் திருமண நிகழ்வுக்கு நீங்கள் போவீர்களா” என்று, ட்ரம்பிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டானர்.
அதற்கு ட்ரம்ப், “அவர் பல ஆண்டுகளாக நான் அறிந்த ஒருவர். நான் வரவேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆனால், அது மிகவும் சிறிய, தனிப்பட்ட நிகழ்ச்சியாக இருக்கும். நான் செல்வதற்கு முயற்சிப்பேன்.
“நான் பல வேலைகளுக்கு மத்தியில் இருக்கிறேன். இது எனக்கு சரியான நேரம் இல்லை என்று சொன்னேன். ஈரான் தொடர்பான விடயங்களும் ஏனைய வேலைகளும் இருக்கின்றன. எதுவும் செய்ய முடியாத நிலை.
“நான் சென்றாலும் விமர்சிக்கப்படுவேன், நான் செல்லா விட்டாலும் பொய்யான செய்திகள் மூலம் விமர்சிக்கப்படுவேன். ஆனால், அவர் பல ஆண்டுகளாக நான் அறிந்த ஒருவர். அவர்கள் சிறந்த இல்லற வாழ்க்கையை வாழ்வார்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.
ட்ரம்ப் மற்றும் அவரது முதல் மனைவிக்கு பிறந்த மகனான Donald John Trump Jr தனது 49ஆவது வயதில் இரண்டாவது திருமணம் செய்கின்றார்.
rump Jr அவரது முதல் மனைவியை விவகரத்து செய்துள்ளார். அவர்கள் 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து, 2018ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றுள்ளனர். அந்த திருமண உறவில் அவர்களுக்கு 05 பிள்ளைகள் உள்ளனர்.
தற்போது rump Jr பெட்டினா ஆன்டர்சன் (Bettina Anderson) என்பவரைதிருமணம் செய்யவுள்ளார்.
இவர்களின் திருமண நிகழ்வில் குடும்பத்தவர்கள் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள் என 50 பேருக்கு உட்பட்டவர்களே கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

