தேசபந்து மீது ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை – சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தகவல்

2022 காலி காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்ட தாக்குதல் வழக்கில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தேசபந்து மீது ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை – சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

2022-ஆம் ஆண்டு காலிமுகத்திடலில்  இடம்பெற்ற கோட்டா கோ கம  போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக எதிர்வரும் ஒரு மாத காலத்தினுள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்ப்பதாகச் சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

நீண்டகாலமாக விசாரணையில் இருந்து வந்த இந்த வழக்கில், சட்டமா அதிபரின் இந்த அறிவிப்பு முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. குறித்த போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொறுப்பான அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கு எதிரான நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தரப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT