தலங்கம பொலிஸில் ஆஜரான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கைது

இலங்கையின் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, இன்று தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ வெற்றி தின ஒத்திகை நிகழ்வுக்கு தடையுண்டாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தலங்கம பொலிஸில் ஆஜரான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

விமல் வீரவன்ச, இன்று காலை தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இலங்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 18ஆம் தேதி நடைபெற்ற இராணுவ வெற்றி தின நிகழ்வுக்கான ஒத்திகை நடவடிக்கைகளுக்கு தடையேற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க அவர் முன்னதாக அழைக்கப்பட்டிருந்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதற்காக கடந்த சனிக்கிழமை தலங்கம பொலிஸ் நிலையம் வருமாறு அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவர் அன்றைய தினம் முன்னிலையாகவில்லை.

இந்த நிலையில், இன்று காலை அவர் தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதைத் தொடர்ந்து பொலிஸார் அவரை கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், அவருக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT