திருமணமான பெண்களில் 10.6% பேருக்கு குழந்தை இல்லை: கணக்கெடுப்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

இலங்கையில் திருமணமான பெண்களில் 10.6% பேருக்குக் குழந்தைகள் இல்லை; 33.3% இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுள்ளதாக மக்கள் தொகை, வீடமைப்பு கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது. நகர்ப்புறம், பெருந்தோட்டம் இடையே பெரும் வித்தியாசங்கள் பதிவாகியுள்ளன.

திருமணமான பெண்களில் 10.6% பேருக்கு குழந்தை இல்லை: கணக்கெடுப்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டில் திருமணமான பெண்களில் 10.6 சதவீதமானோருக்குக் குழந்தைகள் இல்லை எனத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மக்கள் தொகை மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, இலங்கையிலுள்ள திருமணமான பெண்களில் பெரும்பான்மையானோர், அதாவது 33.3 சதவீதமானோர், தங்கள் வாழ்நாளில் இரண்டு குழந்தைகளை மட்டுமே பிரசவித்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

எனினும், பொருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் பெண்களை எடுத்துக் கொண்டால், அவர்களில் அதிக சதவீதமானோர் மூன்று குழந்தைகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை, பெருந்தோட்டப் பிரிவில் திருமணமான பெண்களில் 12.4 சதவீதமானோருக்குக் குழந்தைகள் இல்லை என்றும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

திருமணமான பெண்களில் வெறும் ஒரு குழந்தையை மட்டுமே பெற்றுள்ளோரின் அதிகூடிய சதவீதம் நகர்ப்புறப் பிரிவிலிருந்தே பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 21.3 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாகக் குறித்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT