ஒரு Photocopyக்கு 850 ரூபாய் அறவிட்ட கடை; திடீரென சுற்றிவளைத்த நுகர்வோர் விவகார அதிகார சபை

புத்தளத்தில் ஒரு பிரதிக்கு 850 ரூபாய் அறவிட்ட கடை மீது நுகர்வோர் விவகார அதிகார சபை திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரு Photocopyக்கு 850 ரூபாய் அறவிட்ட கடை; திடீரென சுற்றிவளைத்த நுகர்வோர் விவகார அதிகார சபை
ADVERTISEMENT
ADVERTISEMENT

பிரதி (Photocopy) ஒன்றுக்கு 850 ரூபாய் அறவிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், புத்தளம் மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றை நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் திடீர் சுற்றிவளைப்புக்கு உட்படுத்தியுள்ளனர்.

குறித்த கடையில் பிரதி ஒன்றை எடுத்த நுகர்வோர் ஒருவர், அக்கடையில் முதலாளி 30 வருடங்கள் முன்னோக்கி உள்ளார் என சமூக வலைத்தளங்களில் இவ்விடயத்தை அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார். குறித்த பதிவு வைரலானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதனையடுத்து, நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை அதிகாரிகள், நேற்று வெள்ளிக்கிழமை (25) குறித்த வர்த்தக நிலையத்துக்குச் சென்று இந்த விசேட சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.

இந்தச் சோதனையின் போது நுகர்வோர் சட்டங்களை மீறும் வகையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான சான்றுகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, குறித்த கடைக்கு எதிராக உரிய நீதவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் விதிகளை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றங்கள் ஊடாக வழக்குத் தாக்கல் செய்து, சந்தை ஒழுங்கமைப்பை உறுதிப்படுத்தும் சோதனைகளை அதிகார சபை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

அத்துடன், நியாயமற்ற அதிகூடிய விலை அறவீடு மற்றும் சந்தை முறைகேடுகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருப்பின், 1977 என்ற துரித தொலைபேசி இலக்கத்துக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு, நுகர்வோருக்கு அதிகார சபை பொது அழைப்பு விடுத்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT