மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றப் பதிவாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியிடம் இலஞ்சம் கோர முயன்ற குற்றச்சாட்டில் மினுவாங்கொட மாவட்ட நீதிமன்றப் பதிவாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியிடம் இலஞ்சம் கோருவதற்காக முறையற்ற விதத்தில் அழுத்தங்களை பிரயோகிக்க முயன்ற சம்பவம் ஒன்று தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இவ்வாறு கைது செய்யப்பட்ட நீதிமன்றப் பதிவாளர், இன்றைய தினம் (02) மாலை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT