பழங்களில் ஆபத்தான இரசாயனமா? 2027 முதல் கடும் சட்ட நடவடிக்கை – அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் கலந்த பழங்களை விற்பனை செய்வோருக்கு எதிராக 2027 ஏப்ரல் 01 முதல் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.

பழங்களில் ஆபத்தான இரசாயனமா? 2027 முதல் கடும் சட்ட நடவடிக்கை – அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
ADVERTISEMENT
ADVERTISEMENT

மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாதுகாப்பற்ற இரசாயனங்களைப் பயன்படுத்தி பழங்களை விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 01ஆம் திகதி முதல் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் பாவனையாளர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் ஏதுவாக, நேற்று வியாழக்கிழமை (01) ஆரம்பித்து வைக்கப்பட்ட “சிறுவர்களுக்கு நஞ்சற்ற பழங்கள்” (Poison-Free Fruits for Children) என்ற புதிய தேசிய பாவனையாளர் பாதுகாப்புத் திட்டத்தின் போதே, அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பாவனையாளர் விவகார அதிகார சபை (CAA) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியிலுள்ள பழ சில்லறை வியாபாரிகள் மற்றும் மொத்த விநியோகஸ்தர்கள் அனைவரும் முறையாகப் பதிவு செய்யப்படவுள்ளனர். அத்துடன் அறுவடை செய்தல், பழுக்க வைத்தல், போக்குவரத்து மற்றும் விற்பனை உள்ளிட்ட ஒட்டுமொத்த விநியோகச் சங்கிலியிலும் பாதுகாப்பான முறைகளைக் கையாள்வது தொடர்பாக அவர்களுக்கு விழிப்புணர்வும் வழிகாட்டல்களும் வழங்கப்படவுள்ளன.

தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இன்றி பழங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை அடையாளம் கண்டு, பாவனையாளர்கள் அத்தகைய விற்பனையாளர்களை இலகுவாக அறிந்துகொள்ளும் வகையில் விசேட சான்றிதழ் வழங்கும் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

மேலும், நாடு முழுவதும் பழங்கள் விற்பனை செய்யப்படும் இடங்கள் வரைபடமாக்கப்பட்டு (Mapping), பாதுகாப்பான பழங்களை விற்பனை செய்யும் நிலையங்களை நுகர்வோர் உடனடியாக அடையாளம் காணும் வகையில் கியூஆர் (QR) குறியீடு அடிப்படையிலான கட்டமைப்பும் உருவாக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இத்திட்டம் வெறும் சுற்றிவளைப்புகள் மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் விவசாயிகள், விநியோகஸ்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் என அனைவரையும் உள்ளடக்கிய மிகவும் பொறுப்புமிக்க மற்றும் பாதுகாப்பான பழ விநியோகச் சங்கிலியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பாவனையாளர் விவகார அதிகார சபை வலியுறுத்தியுள்ளது. 

குறிப்பாக சிறுவர்களுக்காக பழங்களை கொள்வனவு செய்யும் போது, பழங்களின் வெளிப்புறத் தோற்றம் மற்றும் விலையை மட்டுமே கருத்தில்கொள்ளாமல் உணவுப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளதுடன், இந்த முன்னெடுப்பை வெற்றிகரமாக முன்னெடுக்க அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பையும் கோரியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT