‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி’: வவுனியாவில் உணர்வெழுச்சி அஞ்சலி!

நகர வீதியின் ஊடாக சென்ற ஊர்தியை உணர்வெழுச்சியுடன் வரவேற்ற வவுனியா மக்கள், உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி’: வவுனியாவில் உணர்வெழுச்சி அஞ்சலி!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளின் நினைவுகளைச் சுமந்த ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி’ நேற்று (14) வவுனியாவை சென்றடைந்தது.

யாழ்ப்பாணம் - நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக ஆரம்பமான இந்த ஊர்தி பவனி, ஓமந்தை ஊடாக வவுனியா நகரை அடைந்தது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதன்போது வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அஞ்சலி செலுத்தியதுடன், மாநகர சபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

அத்துடன், நகர வீதியின் ஊடாக சென்ற ஊர்தியை உணர்வெழுச்சியுடன் வரவேற்ற வவுனியா மக்கள், உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பமான இந்த ஊர்திப் பவனியானது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் பயணிக்கிறது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -