மொட்டு சின்னத்தில் போட்டி? இதுவரை தீர்மானம் இல்லை!
இந்த விடயம் தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் இதுவரையில் கலந்துரையாடவில்லை.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதா என்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் இதுவரையில் கலந்துரையாடவில்லை என, கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் நிலைப்பாட்டில் கட்சியில் பெரும்பான்மையானோர் உறுதியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.