நிலநடுக்கங்களே திமிங்கிலங்கள் இலங்கை கடற்கரைக்கு வர காரணம்
கல்பிட்டி கடற்கரையை நோக்கி திமிங்கிலங்கள் சென்றமைக்கு இந்து சமுத்திர பகுதியில் அண்மையில் இடம்பெற்ற நில அதிர்வுகளே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

கல்பிட்டி கடற்கரையை நோக்கி திமிங்கிலங்கள் சென்றமைக்கு இந்து சமுத்திர பகுதியில் அண்மையில் இடம்பெற்ற நில அதிர்வுகளே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்து சமுத்திரத்தில் அண்மையில் இடம்பெற்ற நில அதிர்வுகள் காரணமாக திமிங்கிலங்கள் இலங்கை கடற்கரைகளை நோக்கி நகரலாம் என கடல்சார் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி 11 ம் திகதி கல்பிட்டி கடற்கரையை நோக்கி திமிங்கிலங்கள் சென்றமைக்கு இந்து சமுத்திர பகுதியில் அண்மையில் இடம்பெற்ற நில அதிர்வுகளே காரணமாக இருக்கலாம் என கடல்சார் நிபுணர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
திமிங்கிலங்கள் கற்பிட்டி கண்டங்குளி கடற்கரைக்கு வந்ததை தொடர்ந்து 15 மணித்தியால கடும் முயற்சியின் பின்னர் அதிகாரிகள் அவற்றை மீண்டும் கடலுக்குள் அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.