எங்களுக்கு இதுபோன்ற வெற்றி தேவையில்லை.. பென் ஸ்டோக்ஸ் தரமான பதிலடி!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றிருந்தாலும், கிரிக்கெட்டின் மெக்கா என்ற போற்றப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாட்டின் புனிதத்திற்கு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் களங்களத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
பேர்ஸ்டோவின் ரன் அவுட் சர்ச்சை சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் பேசுகையில், ஆஸ்திரேலிய அணியின் எனக்கு எதிரான திட்டத்தை மாற்றினர். அதுதான் எனது விக்கெட்டை இழக்க காரணமாக அமைந்தது.
மைதானத்தின் நீண்ட தூரமுள்ள பகுதியில் சிக்சர் அடிக்க வேண்டிய நிலை வந்தது. இருப்பினும் இந்த ஆட்டம் சிறந்ததாக அமைந்தது. 2 போட்டிகளில் தோல்வியடைந்திருந்தாலும், இன்னும் 3 போட்டிகள் அமைந்துள்ளது.
சிம்பாப்வே அணியை வீழ்த்தி அதிரடி காட்டிய இலங்கை அணி
பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வென்றிருக்கிறோம். அதனால் வரும் போட்டிகளில் வெற்றிபெறுவோம் என்று நம்புகிறேன்.
பேர்ஸ்டோவின் விக்கெட்டை பொறுத்தவரை, ஓவர் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதா என்று நடுவர்களிடம் கேள்வி எழுப்பினேன். அதற்கு நடுவர்கள், இல்லை என்று பதில் அளித்தார்கள். அதனால் அது அவுட் என்று தான் முடிவு செய்யப்பட வேண்டும்.
ஒருவேளை பேர்ஸ்டோவின் இடத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் யாராவது இருந்திருந்தால், நிச்சயம் நடுவர்களிடம் அப்பீலுக்கு சென்றிருக்க மாட்டேன். நிச்சயம் ஸ்பிரிட் ஆஃப் தி கேம் பற்றி ஆழமாக சிந்தித்திருப்பேன். என்னை பொறுத்தவரை இப்படியொரு வெற்றியை பெற வேண்டுமா என்று கேட்டால், வேண்டாம் என்றே சொல்லுவேன்.
நானும், மெக்கல்லமும் வீரர்களிடம் இப்படி ஆடுங்கள், அப்படி விளையாடுங்கள் என்று அறிவுறுத்த மாட்டோம். ஒருவேளை பேஸ்பால் திட்டத்தில் விளையாடினால் நிச்சயம் அவர்களை நாங்கள் அனைவரும் பாதுகாப்போம்.
எங்களை பொறுத்தவரை வீரர்கள் அனைவரும் தாங்கள் எப்படி விளையாடுகிறோம் என்ற தெளிவுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.