சிம்பாப்வே அணியை வீழ்த்தி அதிரடி காட்டிய இலங்கை அணி
இன்று (02) நடைபெற்ற உலகக் கிண்ண ஒருநாள் போட்டித் தகுதிச் சுற்றுப் போட்டியின் சுப்பர் 6 சுற்றில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

இன்று (02) நடைபெற்ற உலகக் கிண்ண ஒருநாள் போட்டித் தகுதிச் சுற்றுப் போட்டியின் சுப்பர் 6 சுற்றில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
புலவாயோவில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் சிம்பாப்வே அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.
காயம் அடைந்த லஹிரு குமாரவுக்கு பதிலாக மதீஷ் பத்திரனை அழைத்து இலங்கை அணி இன்று களமிறங்கியது.
இலங்கை பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொண்ட சிம்பாப்வே அணியால் 32 ஓவர்கள் 2 பந்துகள் முடிவில் 165 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
பந்துவீச்சில் மஹிஷ் தீக்ஷன 4 விக்கெட்டுக்களையும், டில்ஷான் மதுசங்க 3 விக்கெட்டுக்களையும், மத்திஷ பத்திரன இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி 33 ஓவர் ஒரு பந்தில் ஒரு விக்கெட்டை இழந்து வெற்றியை பதிவு செய்தது.
இலங்கை இன்னிங்ஸ் அணிக்காக சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய பத்தும் நிஷங்க தனது இரண்டாவது சதத்தை பெற முடிந்தது.
பத்தும் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்தார்.
திமுத் கருணாரத்ன 30 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.