காயம் காரணமாக வனிந்து ஹசரங்க டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகும் அபாயம்
ஹசரங்கவுக்கு மாற்றாக துஷான் ஹேமந்தா இலங்கை அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இலங்கையின் முன்னணி ஆல்ரவுண்டரான வனிந்து ஹசரங்க, தொடை தசைநார் காயம் காரணமாக ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடரின் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போகும் வாய்ப்பு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரி 8 ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிரான இலங்கையின் தொடக்க ஆட்டத்தின் போது ஹசரங்கா காயமடைந்தார். அந்தப் போட்டியில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றிருந்தது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்த நிலையில், ஹசரங்கவுக்கு மாற்றாக துஷான் ஹேமந்தா இலங்கை அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT