உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 3,000 ஓட்டங்களைக் கடந்த முதல் இந்திய வீரரானார் சுப்மன் கில்; ரிஷப் பண்டும் தனிச்சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் 3,000 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஓட்டங்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும், ரிஷப் பண்ட் முதல் விக்கெட் காப்பாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 3,000 ஓட்டங்களைக் கடந்த முதல் இந்திய வீரரானார் சுப்மன் கில்; ரிஷப் பண்டும் தனிச்சாதனை
ADVERTISEMENT
ADVERTISEMENT

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 3,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதலாவது இந்தியத் துடுப்பாட்ட வீரர் என்ற வரலாற்றுப் பெருமையை இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில் தனதாக்கியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக வெலிங்டனில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின்போதே அவர் இச்சாதனையைப் படைத்துள்ளார்.

இச்சாதனையை எட்டுவதற்கு 83 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் களமிறங்கிய சுப்மன் கில், நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் கிளென் பிலிப்ஸின் பந்துவீச்சில் சிக்ஸர் ஒன்றை விளாசி 3,000 ஓட்டங்களைக் கடந்தார். தனது 77 ஆவது இன்னிங்ஸில் இம்மைல்கல்லை எட்டியதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 3,000 ஓட்டங்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்காக அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதேவேளை, இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்டும் இப்போட்டியின்போது 3,000 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஓட்டங்களைக் கடந்த முதலாவது விக்கெட் காப்பாளர்-துடுப்பாட்ட வீரர் என்ற தனிச்சாதனையைப் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT